Sunday, July 24, 2011

My Painting Printing and Embroidery

Lady pavadai






Pavadai - Embroidery and Sequencing






















Pavadai - Glass work












Pavadai - sequence work and embroidery

































Pavadai - Winnie the Pooh - Sequence Work

















Pavadai - Mickey Mouse - Sequence Work














Saree Embroidery





















Pallu Embroidery - zardosi, sequence, kundhan work























Saree Embrodery - pearl work

























Pallu



























Pearl work





























Gold Printing






























































Emboss Printing




































































Gold Printing














































































































Saree printing - Gold Printing









































Saturday, March 24, 2007

பூசணிக்காய் புளிக்கூட்டு

தேவையான பொருட்கள்:

பூசணிக்காய் 1 பத்தை
புளி - எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு - 1/2 ஆழாக்கு/கப்
கடலை பருப்பு - 4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2 (காய்ந்த மிளகாய்)
தேங்காய் - 1/2 மூடி
உப்பு - தேவைக்கேற்ப
சாம்பார் பொடி - 2 ஸ்பூன்

செய்முறை:

1. பூசணிக்காயை நீள வாக்கில் சிறு துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.
2. துவரம் பருப்பையும் கடலை பருப்பையும் மஞ்சள் தூள் போட்டு வேகவிடவும்.
3. உளுத்தம் பருப்பு, மிளகாய், பெருங்காயம் - இவற்றை வறுத்து தேங்காயுடன் அரைக்கவும்.
4. புளியைத் தண்ணீர் விட்டு கரைத்து அதில் நறுக்கிய பூசணிக்காய், மஞ்சள் தூள், உப்பு, சாம்பார் பொடி போட்டு கொதிக்கவிடவும்.
5. காய் வெந்தவுடன் வேகவைத்த பருப்புகளை போட்டு கொதிக்கவிடவும்.
6. பிறகு அரைத்து வைத்த விழுதை சேர்த்து கொதித்தபின் இறக்கவும்.

வாழைத்தண்டு புளிக்கூட்டு

தேவையான பொருட்கள்:

புளி - எலுமிச்சை அளவு
துவரம் பருப்பு - 3/4 ஆழாக்கு/கப்
கடலை பருப்பு - 4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
தனியா - 2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3 (காய்ந்த மிளகாய்)
தேங்காய் - 1/2 மூடி
உப்பு - தேவைக்கேற்ப
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
மோர் - 1 சிறிய கப்

செய்முறை:

1. வாழைத்தண்டின் மேல் பட்டையை எடுத்துவிட்டு நீள வாக்கில் சிறு துண்டங்களாக நறுக்கி மோர் கலந்த நீரில் போடவும்.
2. துவரம் பருப்பையும் கடலை பருப்பையும் மஞ்சள் தூள் போட்டு வேகவிடவும்.
3. புளியைத் தண்ணீர் விட்டு கரைத்து அதில் நறுக்கிய வாழைத்தண்டு, மஞ்சள் தூள், உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
4. காய் வெந்தவுடன் வேகவைத்த பருப்புகளை போட்டு கொதிக்கவிடவும்.
5. ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு தாளித பொருட்களை 1 ஸ்பூன் எண்ணைவிட்டு இளஞ்சிவப்பாக வறுத்து, அரைத்து கூட்டில் சேர்க்கவும்.
6. எல்லாம் சேர்ந்து கொதித்தப்பின் இறக்கவும்.

அவரை / பீன்ஸ் / கொத்தவரை / புடலங்காய் பருப்பு கூட்டு

தேவையான பொருட்கள்:

மேல்கூறிய காய்களில் ஏதேனும் ஒன்று - தேவைக்கு ஏற்ப
துவரம் பருப்பு - 1 ஆழாக்கு/கப்
கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
மிளகாய் வற்றல் - 2 (காய்ந்த மிளகாய்)
தேங்காய் - 1/2 மூடி
பெருங்காயம் - 1 சிட்டிகை
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்

செய்முறை:

1. காய்களை பொடியாக நறுக்கி கழுவி நீர்விட்டு வேகவைக்கவும்
2. துவரம் பருப்பை மஞ்சள் தூள் போட்டு வேகவிடவும்.
3. காய்கள் வேகும் பொழுது சாம்பார் பொடி, உப்பு போடவும்.
4. காய்கள் நன்றாக வெந்தபின் வெந்த பருப்பை போடவும்.
5. கடலை பருப்பு, மிளகு, மிளகாய் வற்றல் - இவற்றை எண்ணை விட்டு இளஞ்சிவப்பாக வறுத்து, துறுவிய தேங்காயையும் சேர்த்து நீர்விட்டு கெட்டியாக அரைக்கவும்.
6. பிறகு 1 ஸ்பூன் அரிசிமாவை நீரில் கரைத்து கொதிக்கும் கூட்டில் விடவும்.
7. பெருங்காயப் பொடியை ஒரு சிட்டிகை சேர்த்து சற்று நேரத்தில் இறக்கவும்.

கத்தரிக்காய் அசடு

தேவையான பொருட்கள்:

பிஞ்சு கத்தரிக்காய் - 1/4 கிலோ
சர்க்கரைவள்ளிகிழங்கு - 1
துவரம் பருப்பு - 1 ஆழாக்கு/கப்
கடலை பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
தனியா - 2 ஸ்பூன்
துறுவிய தேங்காய் - சிறிதளவு
மிளகாய் வற்றல் - 4 (காய்ந்த மிளகாய்)
பெருங்காயம் - 1 சிட்டிகை
வெல்லம் - சிறிது
புளி - எலுமிச்சை அளவு
மஞ்சள் பொடி - 1/2 ஸ்பூன்
உப்பு - 1.5 ஸ்பூன்

செய்முறை:

1. கத்தரிக்காய்களை நீளவாக்கில் நறுக்கி தண்ணீரில் போடவும் (தண்ணீரில் போடாவிட்டால் கருத்துவிடும்).
2. சர்க்கரைவள்ளிகிழங்கை சதுர வடிவுத் துண்டுகளாக்கவும்.
3. புளியை 2 டம்ளர் தண்ணீர் விட்டு கரைக்கவும்.
4. துவரம் பருப்பை சிறிது மஞ்சள் தூள் போட்டு வேகவைக்கவும்.
5. கரைத்த புளி நீரில் சர்க்கரைவள்ளிகிழங்கு, கத்தரிக்காய்கள், உப்பு, மஞ்சள்தூள் போட்டு கொதிக்கவைக்கவும்.
6. காய்கள் வெந்தபின் வேகவைத்த பருப்பை போடவும்
7. கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், தனியா, பெருங்காயம் - இவற்றை எண்ணை விட்டு இளஞ்சிவப்பாக வறுத்து, துறுவிய தேங்காயையும் சேர்த்து நீர்விட்டு கெட்டியாக அரைக்கவும்.
8. பருப்பு போட்டு கூட்டு கொதிக்கும் போது அரைத்த விழுதையும் போடவும்.
9. பிறகு 1/2 ஸ்பூன் அரிசிமாவை நீரில் கரைத்து கொதிக்கும் கூட்டில் விடவும்.
10. கொதித்தவுடன் சிறிது வெல்லம் சேர்த்து இறக்கவும்.

அவியல்

தேவையான பொருட்கள்:

பரங்கிக்காய் - 1 துண்டு
பூசணி - 1 துண்டு
பெரிய தேங்காய் மூடி - 1
கடுகு - 1 ஸ்பூன்
சீரகம் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சைமிளகாய் - 3
தேங்காய் எண்ணை - 1 கரண்டி
உப்பு
மஞ்சள் பொடி
தயிர் - 1 கப்
அரிசிமாவு - 1 ஸ்பூன்
கொத்துமல்லி, கருவேப்பிலை
காய்கறிகள்: அவரை, பீன்ஸ், கொத்தவரை, சர்க்கரைவள்ளிகிழங்கு, சேப்பங்கிழங்கு, உருளைகிழங்கு, பட்டாணி, பெங்களூர் கத்தரி - தேவைக்கேற்ப

செய்முறை:

1. சேப்பங்கிழங்கு, உருளைகிழங்கு - இவற்றை வேகவைத்து தோல் உரித்துக்கொண்டு துண்டுகளாக்கவும்.
2. மற்ற காய்கறிகளையும் துண்டங்களாக்கி சிறிது மஞ்சள் பொடி, 1/2 ஸ்பூன் உப்பு போட்டு வேகவைக்கவும்.
3. தண்ணீர் அதிகமாக இருந்தால் வடித்துக்கொள்ளவும்.
4. தேங்காய், சீரகம், பச்சைமிளகாய், சிறிது உப்பு - இவற்றை மிக்ஸியில் நன்றாக அரைத்து அரிசிமாவும் சேர்த்து தயிரில் கரைத்து வெந்துகொண்டிருக்கும் காய்களில் விடவும்.
5. உரித்த கிழங்குகளையும் அதில் போடவும்.
6. தேங்காய் எண்ணையை காயவைத்து அதில் கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து அவியலில் கொட்டி இறக்கவும்.

பரங்கிக் கொட்டை பால் கூட்டு

தேவையான பொருட்கள்:

இளம்பரங்கிக் கொட்டை - 1
பால் - 1/2 டம்ளர்
சர்க்கரை - 3 டீ ஸ்பூன்
அரிசி மாவு - 1 ஸ்பூன்
உப்பு - 1/4 ஸ்பூன்
கடுகு - 1/2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய் - 1

தேங்காய் - சிறியது

செய்முறை:

1. பரங்கிக் கொட்டையைத் தோல் நீக்கி சிறு நீளத் துண்டுகளாக்கவும்.
2. உளுத்தம் பருப்பு மற்றும் மிளகாயை வறுத்து தேங்காயுடன் சேர்த்து அரைக்கவும்.
3. பரங்கித்துண்டுகளுடன் உப்பு சேர்த்து வேகவிடவும்(மிகவும் குழையாமல் இருக்க வேண்டும்)
4. வெந்ததும் நீர் அதிகமாக இருந்தால் வடித்துவிட்டு சர்க்கரையை போடவும்.
5. பாலில் அரிசிமாவு சேர்த்து கரைத்துக்கொள்ளவும்.
6. அரைத்த தேங்காய் விழுதை போட்டு கூட்டை கொதிக்கவிடவும்.

7. அரிசிமாவு கரைத்த பாலையும் விட்டு கொதித்த பின் இறக்கவும்.

Friday, August 04, 2006

முதலெழுத்து


இப்பொழுதுதான் முதன்முறையாக ஒரு இணையதளத்தில் எனது சமயல் குறிப்புகளைப் பதிவு செய்ய முன்வந்துள்ளேன். முதலில் எதை எழுதுவது என்று தெறியவில்லை. சரி எதையாவது எழுதிதான் பார்ப்போமே என்று இதை ஆரம்பிக்கிறேன். வீட்டு வேலைகளை ஓரம் கட்டிவிட்டு இளம் வயதினர் போல மின்னஞ்சல் அனுப்புவதிலும் இணையதளத்தில் சமையல் குறிப்புகளைப் பதிவு செய்வதிலும் ஈடுபடலாம் என்று இந்த அறுபதில் ஒரு ஆசை.